புதிதாக கனடாவிற்கு புலம்பெயர இருப்பவர்களுக்கான தகவல்

கனடா, 2021ஆம் ஆண்டில் 401,000 பேரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை பெறத் துவங்கியுள்ளது.

சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளர்களுக்கான 20,000 விண்ணப்பங்கள்

பிற தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய துறைகளில் தற்காலிக பணியாளர்களுக்கான 30,000 விண்ணப்பங்கள்

கனேடிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான 40,000 விண்ணப்பங்கள்
புதியவர்களுக்காக கனடா குறித்து சில அடிப்படை தகவல்கள்

நாட்டின் பெயர்: கனடா
தலைநகர்: ஒட்டாவா
பரப்பு: 3,855,102 சதுர மைல்கள்
மக்கள்தொகை: 36.29 மில்லியன்
அதிகாரப்பூர்வ மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு
பணம்: கனேடிய டொலர் (1 கனேடிய டொலர் = 159.71இலங்கை ரூபாய்கள்
5 பெரிய நகரங்கள்: ரொரன்றோ, மொன்றியல், வான்கூவர், கால்கரி, எட்மன்டன்
சர்வதேச தொலைபேசி அழைப்புக்கான குறியீடு: +1
சர்வதேச டொமைன்: .ca
சில பயனுள்ள தகவல்கள்

உலக நாடுகளில், கனடா, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் இரண்டாவது சிறந்த நாடு என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான நிரந்தர வாழிட நிலை அட்டைகள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை என்றாலும், சில ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கவை. நீங்கள் உங்கள் விசாவை எத்தனை முறை புதுப்பித்துக்கொள்ளலாம் என்பதற்கு வரையறையே கிடையாது.

நிரந்தர வாழிட நிலை கொண்டவர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் 12ஆவது நிலை வரை (Grade 12 for all children up to 18 years) இலவச கல்வி. பல்கலைக்கழக கல்விக்கட்டணமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் தொகை, இயலாமை உதவித்தொகை மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும் பயன்கள் என சமூக பயன்களும் உண்டு.

கனேடிய நிரந்தர வாழிட நிலை அட்டை (Canada PR card) வைத்திருப்போர், கனடாவிலிருந்தும், கனடாவுக்குள்ளும், பல முறை பயணிக்கலாம். (கனடாவிலும் தங்கியிருக்கலாம்).

கனேடிய நிரந்தர வாழிட நிலை அட்டை பெற்ற பிறகு, நீங்கள் கனடாவில் 1,095 நாட்கள் (மூன்று ஆண்டுகள்) வாழ்ந்தால், கனேடிய குடியுரிமை பெற தகுதியுடையவர்களாவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.