பெருங்காயத்தால் ஏற்ப்படும் தீமைகள் தெரியுமா?அவதானம்

தமிழர்களின் உணவுகளில் பெருங்காயத்திற்கு என்று ஒரு தனி இடம் உண்டு.

இன்று வரையும் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் சாம்பார், ரசம் போன்றவற்றில் பெருங்காயம் சேர்க்காமல் சமைப்பது என்னும் பழக்கமே கிடையாது. பெருங்காயத்தில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

பெருங்காயம் நன்மை கொடுக்கின்றது என்று அதிகம் சேர்த்தால் ஆபத்தும் ஏற்படும்.

இன்று நாம் பெருங்காயத்தின் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

மருந்தாக தனியாக வாய்வழியாக எடுக்கும் போது உதடுகளில் வீக்கத்தை உண்டாக்கும்.

கர்ப்பகாலத்தில் வயிற்று கோளாறை சரி செய்ய பெருங்காயத்தை அப்படியே வாய்வழியாக எடுத்துகொள்வது பாதுகாப்பற்றது.

கருவுற்ற தொடக்கத்தில் இதை வயிற்றுகோளாறுக்கு மருந்தாக வெறும் வாயில் எடுத்துகொள்ளும் போது அது கருச்சிதைவை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.

தாய்ப்பால் கொடுக்கும் போது பெருங்காயத்தை தனித்து பயன்படுத்த கூடாது.

ஏனெனில் பெருங்காயத்தில் இருக்கும் இரசாயனங்கள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று அவர்களுக்கு இரத்தக்கோளாறுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.

பெருங்காயம் இரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இரத்தபோக்கு கோளாறு இருப்பவர்கள் பெருங்காயத்தை நேரிடையாக வாய்வழியாக எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பெருங்காயத்தை அதிகமாக சேர்க்கும் போது தலைச்சுற்றல், குமட்டல் , தலைவலி பிரச்சனையும் உண்டாகலாம்.

பெருங்காயம் இரத்த உறைதலை மெதுவாக்கலாம்.

அறுவை சிகிச்சையின் போது அதற்கு பிறகும் இரத்தக்கசிவு உண்டாகும் அபாயத்தை பெருங்காயம் அதிகரிக்கலாம் .