பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீச்சு. இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அருண்குமார். இவருக்கு இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியை சேர்ந்த ஷீலா என்ற பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வருகின்றன. இந்நிலையில், அஜித்குமாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஷீலாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், அருண்குமார் ஷீலாவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அவருடன் நேரில் பேச வேண்டும் என கூறிய ஷீலா அவரை அடிமல்லிக்கு வர சொல்லியுள்ளார்.. மேலும், அவருக்கு குறிப்பிட்ட அளவு பணம் தரவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

அதனை ஓப்புகொண்டு அருண்குமார் அவரது நண்பருடன் அடிமல்லிக்கு வந்துள்ளார். அப்போது ஷீலாவிற்கும் அருண்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளாது. இதனால், ஆத்திரமடைந்த ஷீலா மறைத்து வந்திருந்த ஆசிட்டை அவர் மீது வீசினர்.

இதனை அடுத்து, அவரை மீட்ட அவரது நண்பர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆசிட் வீச்சால் அவருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஷீலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.