பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஓரளவு தான் சுவாரசியமாக செல்ல ஆரம்பித்து இருக்கிறதாம்.
இதுவரை, வைல்ட் கார்ட் போட்டியாளராக வெளியேறிய அபிஷேக் ராஜாவே திரும்பவும் வந்திருந்தார். இதன்பின்னர் விஜயின் நடிகர் சஞ்சீவ் நுழைவதாகவும் செய்திகள் உலா வந்தன.
ஆனால், தற்போது வெளியான முதல் ப்ரோமோ காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக, நடன இயக்குநர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அந்த ப்ரோமோ காட்சியில், ஒரு சீன் மட்டும் அவர் சோபாவில் அமர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பின் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
View this post on Instagram