ஒரு நாளைக்கு 70 முறை வாந்தி எடுக்கும் வினோத பெண்….

உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும், விசித்திரமாக நோயால் பாதிக்கப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையுமே ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் லீன் வில்லியன்(39) என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால், அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன உணவு வாந்தி மூலம் வெளியேறுகிறது.

இதனால்,அவர் ஒரு நாளில் 70 முறை வாந்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று லீன் கூறினார். குழந்தைகளைப் பெற்ற பிறகும், இந்த நோயைக் கண்டறிய முடியவில்லை.

ஆனால் எனக்கு காஸ்ட்ரோபரேசிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு, நான் மிகவும் வருத்தமாகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் இருந்தேன். மேலும், நான் எதைச் சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும், வாந்தி மூலம் வெளியே வந்துவிடும் என சோகத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

இந்த அரிய நோய் பிரச்சினையால் அவர் வேலையை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி, காஸ்ட்ரோபரேசிஸ் நோய் என்பது வயிற்றை காலியாக்குவதைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் மற்றும் தசைகளின் பிரச்சனையின் விளைவாகும். இவை தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.