சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்தநிலையில் தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.