ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து பிரபல வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பை வெல்லாத அணியாக உள்ளது. இதனால், அடுத்த சீசனில் நிச்சயம் கோப்பை வென்றாக வேண்டும் என்ற துடிப்பில் அந்த அணி இருக்கிறது.
இதுவரை ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, 15ஆவது சீசன் முதல் வீரராக மட்டுமே அணியில் நீடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால், புது கேப்டனாக உள்ளூர் வீரர் கே.எல்.ராகுல் செயல்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு ஐபிஎல்லில் ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணி முதலில் விராட் கோலி, யுஜ்வேந்திர சாஹலைத்தான் தக்கவைக்கும். இருவரும் மிகமுக்கியமான வீரர்கள். மேலும் தேவ்தத் படிக்கl, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கும் இடையே போட்டி இருக்கிறது.
இப்படி 5 இந்திய வீரர்களுக்கு இடையில் போட்டி இருக்கிறது. அதே நேரத்தில் கிளென் மேக்ஸ்வெலை தக்கவைக்க விரும்ப மாட்டார்கள் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.