அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்த நபரை முதலாளி கண்டித்ததால், டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்படுகின்றது.
பொதுவாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்றாவது ஒரு நாள் ராஜினாமா கடிதம் கொடுக்கும் நிலையும் ஏற்படலாம். அவ்வாறு நாம் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் முறையாக மேல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இன்று அநேக அலுவலகங்களில் ஈமெயில் மூலமாகவே இவ்வாறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது. ஒரு சில அலுவலகங்களில் வெள்ளை காகிதத்தில் எழுதி கொடுப்பார்கள்.
ஆனால் இங்கு நபர் ஒருவர் இரண்டும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளார். என்னவெனில் தான் வேலையை விட்டு செல்வதற்காக டாய்லெட்டில் பயன்படுத்தப்படும் பேப்பரில் ராஜினாமா கடிதத்தினை எழுதியுள்ளார்.
இந்த புகைப்படம் இன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது. குறித்த “யோவ், நான் 25 ஆம் தேதி போய்விடுவேன்” என்ற வார்த்தைகளுடன் கீழே முகம்சுழிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றினையும் வரைந்து கொடுத்துள்ளார்.
இவரின் ராஜினாமாவிற்கு காரணம் இவர், சோம்பேறியாக வேலை செய்யாமல் இருந்துள்ளதை உயர் அதிகாரி கமெராவில் அவதானித்து சத்தம் போட்டுள்ளார். இந்த கோபத்தினாலே தனது வேலையினை ராஜினாமா செய்வதாக இவ்வாறு கடிதம் கொடுத்துள்ளார்.