காரைநகரில் சீரற்ற காலநிலை காரணமாக 265 குடும்பங்கள் பாதிப்பு…. வெளியான தகவல்!

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 265 குடும்பங்களைச் சேர்ந்த 916 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலையின் இன்றைய நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,

அண்மையில் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக 265 குடும்பங்களைச் சேர்ந்த 916 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன்> 8 பேர் தற்காலிகமாக முகாமில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.