சத்து நிறைந்த கோதுமை சம்பா கஞ்சி

கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை மாவு – 3 டீஸ்பூன்,
தண்ணீர் – ஒரு கப்,
ஓமம், சுக்கு, சீரகம், மிளகு – சிறிதளவு,
எலுமிச்சம்பழம் – அரை மூடி,
நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 2.

செய்முறை:

ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.