இலங்கையில் பாணியின் விலையை குறைந்த பட்சம் 100 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாயில் அதிகரிப்பதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 450 கிராம் பாணின் புதிய விலை 80 ரூபாயாகும். பாண் விலை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோதுமை மாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் இல்லை என்றே கூறப்படுகின்றது. வரலாற்றில் முதல் முறையாக 18 ரூபாயினால் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளது.
பாண் தயாரிக்க நீரை தவிர அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால் பாணின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.