நடிகை யாஷிகா சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் புதுமுக நடிகையாக அறிமுகமானவர். சரியான படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்பு வரும் படங்களில் நடித்து வந்தார்.
பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகமாக மாறினார். பின் படங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருந்த அவருக்கு திடீரென ஒரு பயங்கர விபத்து அந்த விபத்தால் எழுந்து நடக்க கூட முடியாமல் படுத்த படுக்கையில் இருந்தார்.
6 மாதங்களுக்கு பிறகு அண்மையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்தார்.
அதைப்பார்த்த ஒரு ரசிகர் நீ இன்னும் சாகவில்லையா என மோசமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார். அதைப்பார்த்த யாஷிகா, தயவுசெய்து நான் சீக்கிரம் சாக வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் என பதில் கொடுத்துள்ளார்.
அதற்கும் அந்த ரசிகர் கண்டிப்பாக வேண்டிக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
அவரின் அந்த கமெண்டிற்காக ரசிகர்கள் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.