பிரித்தானியாவில் கடந்த வாரம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட 12 வயது சிறுமியின் வழக்கு தொடர்பாக பொலிஸார் முக்கிய தகவல்களை வெயிட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று (நவம்பர் 25), இங்கிலாந்தின் லிவர்பூல் சிட்டி சென்டரில் நடந்த ‘Christmas lights switch on’ நிகழ்ச்சியில், 12 வயது பள்ளி மாணவியான ஏவா ஒயிட் (Ava White) கலந்துகொண்டுள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் கிறிஸ்துமஸ் விளக்குகளை எரியச்செய்யும் நிகழ்ச்சி தொடங்கியபோது, சிறுமி ஏவா ஒயிட் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய ஏவா ஒயிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், நிகழ்ச்சியில் ஏவா ஒயிட் தனது நண்பர்களுடன் இருந்ததாக மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பிறகு தொடர்ந்த தீவிர விசாரணைக்கு பிறகு, 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அதில் தற்போது 14 வயதுடைய 1 சிறுவன் மீது கொலை மற்றும் கூர்மையாக ஆயுதத்தை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அவர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 13 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களும் விசாரணைகள் தொடர்வதால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏவா ஒயிட், லிவர்பூலில் உள்ள நோட்ரே டேம் கத்தோலிக்க கல்லூரியில் 8-ம் ஆண்டு படித்து வந்தார்.
துப்பறியும் கண்காணிப்பாளர் சூ கூம்ப்ஸ் (Sue Coombs) கூறுகையில்: ‘நாங்கள் அவாவின் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம், இந்த கடினமான நேரத்தில் அவர்களின் தனியுரிமை தொடர்ந்து மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூம்ப்ஸ் மேலும், சம்பவத்தையோ அல்லது அதன் பின்விளைவுகளையோ படம்பிடித்தவர்கள், https://mipp.police.uk/operation/05MP21M43-PO1 என்ற முகவரியில் உள்ள படைக்கு படங்கள் அல்லது காட்சிகளை அனுப்புமாறு வலியுறுத்தினார்.