சுவிஸில் டிசம்பரில் ஏற்ப்படப்போகும் மாற்றம்

சுவிட்சர்லாந்தில், மாகாண கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பனிச்சறுக்கு விளையாட்டு விதிகள் வரை, 2021 டிசம்பர் மாதத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இக்கட்டுரையில் காணலாம்…

காப்பீடு

காப்பீடு குறித்து முடிவெடுக்க இது சரியான நேரம். ஏனென்றால், உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் மாற்ற விரும்பினால், அதை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் அதாவது, நாளைக்குள் செய்தாகவேண்டும்.

மாகாண அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன.

சமீபத்தில் பெடரல் கவுன்சில் புதிய சுகாதார விதிகளை அமுல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, டிசம்பர் முழுவதிலுமே மாகாணங்களில் கொரோனா சூழலைப் பொருத்து பல்வேறு அளவுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அவற்றில், மாஸ்க் அணிதல் மற்றும் கூடுதல் பரிசோதனைகள் முதலான விதிகள் இருக்கக்கூடும். மேலும், மதுபான விடுதிகளை மூடும் திட்டமும் கைவசம் உள்ளதாம்.

அதுபோக, பெடரல் மட்டத்தில், அதாவது மொத்த சுவிட்சர்லாந்துக்குமான சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரயில் சேவை குறித்த சில அறிவிப்புகள்

தூங்கும் வசதியுடனான ரயில் சேவை ஒன்று, தினமும் சூரிச்சிலிருந்து, பேசல் மற்றும் கொலோன் வழியாக ஆம்ஸ்டர்டாம் வரை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும், சில பாதைகளில், சூரிச்சுக்கும் Munichக்கும் இடையிலான EuroCity ரயில்களின் பயண நேரம் மூன்றரை மணி நேரங்களாக, அதாவது, அரை மணி நேரம் குறைக்கப்பட உள்ளது.

Basel – Bern – Brig — Milan பாதையில், இனி தினமும் கூடுதலாக ஒரு EuroCity ரயில் விடப்பட உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி

நாடு முழுவதும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளில் பனிச்சறுக்கு சீசன் துவங்கியாயிற்று

பெரும்பாலான சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் டிசம்பரில் திறக்கப்பட உள்ளன. 2020இல் போல் இல்லாமல், இந்த ஆண்டு வெளிநாட்டவர்களும் வரவேற்கப்படுகிறார்கள் (சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான விதிகள் மாறாமல் இருக்கும் பட்சத்தில்).

ஆனால், பனிச்சறுக்குப் பகுதிகளில் அமைந்துள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் கொரோனா சான்றிதழ், கேபிள் கார்களில் மாஸ்குகள் கட்டாயம் முதலான கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் சந்தைகள் மீண்டும் திறந்துவிட்டன

2020இல் கொரோனா காரணமாக கிறிஸ்தும் சந்தைகள் திறக்காத நிலையில், இந்த ஆண்டு, அவை சுவிட்சர்லாந்து முழுவதிலும், டிசம்பர் மாதம் முழுவதும் திறந்திருக்கும்.

பெரும்பாலான சந்தைகளில் கொரோனா சான்றிதழ்கள் கட்டாயம். அத்துடன், சந்தைகளில் அமைந்திருக்கும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் நீங்கள் நிச்சயம் கொரோனா சான்றிதழ்களைக் காட்டவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.