யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா…

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அண்மைக்காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடாங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.