சிறுவனின் உயிரை பறித்த செல்பி மோகம்….

உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியை சேர்ந்த சிறுவன் உவைஷ் அகமத் (14). இவருக்கு செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் விதவிதமாக செல்பி எடுத்து வந்துள்ளான்.

இந்நிலையில், வழக்கம் போல வித்யாசமான செல்பி எடுக்கும் முயற்சியில் சிறுவன் நிஜ துப்பாக்கியை தனது நேற்றில்யில் வைத்து செல்பி எடுத்துள்ளான். அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்ட சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.