பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் நேருக்கு நேராக மோதியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கினால் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இதில் பிரியங்கா தாமரை பற்றியும், தாமரை பிரியங்கா குறித்தும் பரபரப்பாக பேசி சண்டையிட்டுள்ளனர். இதுவரை விளையாட்டு புரியாமல் இருந்த தாமரை சமீப நாட்களாக களத்தில் நின்று விளையாடும் காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாமரைக்கு ஆதரவாக ரசிகர்கள் பட்டாளம் தற்போது அதிகரித்துள்ளது. அதாவது கிராமத்தில் பிறந்து படிப்பறிவு இல்லாமல், இன்று ஒட்டுமொத்த போட்டியாளர்களின் நகரத்து வாழ்க்கைக்கு ஈடுகொடுத்துள்ளது வேற லெவலாக பார்க்கப்படுகின்றது.