நடிகை ராதா 80களில் பட்ய கிளப்பிய ஒரு நடிகை. இவர் நடித்த பாதி படங்கள் ஹிட் வரிசையில் தான் உள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் டாப் நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 10 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த இவர் தனது அக்கா அம்பிகாவுடனும் நிறைய படங்கள் இணைந்து நடித்திருக்கிறார்.
சினிமாவை தாண்டி ராதா சொந்த தொழிலில் நிறைய ஆர்வம் காட்டி வருகிறார்.
ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். கார்த்திகா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார், துளசி சில படங்களே நடித்தார், பின் அவரை சினிமா பக்கம் காணவில்லை.
படங்களில் நடிப்பதை விட்ட ராதா நிறைய நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார்.
எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதா அண்மையில் குடும்பத்துடன் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவரது இரண்டாவது மகளை பார்த்த ரசிகர்கள் அட துளசியா இது, படு குண்டாகி ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
View this post on Instagram