பிரபல பட இயக்குனருக்கு எதிராக மேன் முறையீடு செய்யும் SJ சூர்யா

தற்போது நடிகராக அசதி வரும் SJ சூர்யா முன்பு இயக்குனராகவும் வாலி, குஷு என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய குஷி படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தை ரீமேக் செய்யவில்லை.

வாலியை தயாரித்த நிக் ஆர்ட்ஸ்  சக்ரவர்த்தியிடமிருந்து அதன் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி அதனை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டார் போனி கபூர்.

அது தன்னுடைய கதை, தனது அனுமதியில்லாமல் வாலியை ரீமேக் செய்யக் கூடாது என எஸ்.ஜே.சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போனி கபூர் பட வேலைகளை தொடங்க அனுமதியளித்தது.

எனவே அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.