உலர் திராட்சையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உலர் திராட்சை எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற கொழுப்பு, இடுப்பு சதை என்பன குறையும்.
தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
நன்மைகள்
உலர் திராட்சையில் பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ளது.
இது கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும்.
மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதிகளவு உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும்.
இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும்.
இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது. உலர் திராட்சையை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதுவும் உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.