வெலிகம, வெவெகெதரவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் வீட்டின் மேல் தளம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் உயிரிழந்த சிறுமியின் தாயும் சகோதரியும் வீட்டிலிருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெலிகம பொலிஸார், வீட்டில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்களை வரவழைத்தனர்.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.