இன்று பலரும் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை செலுத்த ஆரமை்பித்து விட்டனர்.
இஞ்சி மற்றும் எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையை குறைக்க விரும்பினால் அவர்களின் சிறந்த தெரிவு இஞ்சி மற்றும் லெமன் டீ தான். இஞ்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதான ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இஞ்சி லெமன் டீ குடித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம். அதேபோலே இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவும்.
எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் ஒரு டம்ளர் இஞ்சி லெமன் டீ குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.
டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1 லிட்டர்
எலுமிச்சை – 1
நற்பதமான இஞ்சி – 1 துண்டு
தேன் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் இஞ்சியை சேர்த்து நன்கு 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதனை இறக்கி 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும். இறுதியில் வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், இஞ்சி லெமன் டீ தயார்.