பிக்பாஸில் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை

பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இப்போது போட்டியாளர்களிடம் இல்லை.

ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது பிக்பாஸ் வீட்டில் விவாத மேடை நடந்து வருகிறது. நேற்றிலிருந்து இந்த டாஸ்க் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் ஒரு விஷயத்தை செய்யலாம் என அபிஷேக் செய்ய அது என்னால் செய்ய முடியாது என கோபமாப சிபி பேப்பரை எல்லாம் கிழித்து போட்டுவிட்டு செல்கிறார்.

பின் பிரியங்கா, வருண், அபிஷேக், சிபி என அனைவருமே சண்டை போடுகிறார்கள்.