விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா.
இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், அப்படத்தில் அவருடன் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம் தர்ஷனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது பயங்கர ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ள லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது.
இதோ இப்படி உள்ளார் பாருங்க..