நவம்பர் மாதம் சினிமா துறையில் பெரிய நல்ல விஷயங்கள் அதாவது திருமணம் போல் எதுவும் நிகழ்ச்சி இல்லை.
ஆனால் சின்னத்திரையில் மக்களே எதிர்ப்பார்க்காத வகையில் தொடர்ந்து 3 சின்னத்திரை பிரபலங்களின் திருமணங்கள் நடந்தது. முதலில் ஷபானா-ஆர்யன் திருமணம்.
இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவலே அவ்வளவு சீக்கிரம் வெளியாகவில்லை, பின் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் இருவரும் அறிவித்தார்கள்.
அவர்களது திருமணம் முதலில் நடக்க பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடிக்க ரேஷ்மா-மதன் இருவரும் காதலர்கள் ஆனார்கள். இந்த வருட ஆரம்பத்தில் தான் இவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்.
அடுத்து திருமணம் சீரியல் மூலம் ஒன்றாக நடித்த சித்து-ஸ்ரேயா. இருவரும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களை போல இப்போது அம்மன் சீரியலில் நடித்து வரும் அமல்ஜித்-பவித்ரா இருவரும் நிஜ காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram