வடமராட்சி கடற்கரையில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த 27 ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் 30ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒருசடலமும் கரை ஒதுங்கியிருந்தன.
இதையடுத்து இன்றைய தினம் (02) வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் பிற்பகல் 2:30 மணி அளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியிருந்தன.
இதேவேளை இன்றைய தினம் (02) மேலும் ஒரு சடலம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்குவதனால் மக்கள் மத்தியில் பலத்த அச்ச நிலை தோன்றியுள்ளன.