மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 7 உணவகங்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம் றிஸ்வான் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர்.
மேலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறிய 3 பிரபலமான உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்ட 3 பிரபல்யமான உணவகங்கள் உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (02) வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம், 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.