தமிழகத்தில் முண்ணனி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்று தான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரம்வேற்ப்பை பெற்றுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் வெற்றிகரமாக ஓடியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் 5 சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது.
இதேவேளை பிக்பாஸ் சீசன் 3 ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீசனாக கருத்தப்பட்டது. என்னென்றால் குறித்த சீசன் அன்பு, சண்டை, காதல், நகைச்சுவை என அனைத்தும் அதிகமாகவே இருந்தது. இதனால் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட சீசனாக பிக்பாஸ் சீசன் 3 இருந்தது.
மேலும் இந்நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான லொஸ்லியா போட்டியாளராக பங்கேற்றுள்ளார், இதனையடுத்து அவர் பேசிய தமிழ் ரசிகர்களை மகிழசெய்தது, இதனால் லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்து. இதேவேளை லொஸ்லியா ஆர்மி என உருவாக்கி சமூக வலைதளத்தில் லொஸ்லியாவை கொண்டாடி வந்தனர்.
View this post on Instagram
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் லொஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியன. அந்த வகையில் லொஸ்லியா நடித்து வெளியான ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த திரைபடத்தை தொடர்ந்து லொஸ்லியா தயாரிப்பாளர் கே.ஏஸ் ரவிகுமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், குறித்த படத்தில் அவருடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் தர்ஷனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது பயங்கர ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ள லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியுள்ளது.