பாகிஸ்தானில் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் இவர்தான்!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் – சியால்கோட் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், இன்று அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட இலங்கையர், அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீ வைத்து கொலைப்பட்ட இலங்கையர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் பிரியந்த தியவதன (Priyantha diyawadana) என்பதும், இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் சியால்கோட் நகரில் இருக்கும் Rajco தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

பிரியந்த தியவதன கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு இவர் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவர், Muhammad ibn Abdullah சுவரொட்டியை எப்படி இழிவுபடுத்தியிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தானியர்கள் பலர் இதற்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.