38 நாடுகளில்கால் பதித்த ஒமைக்ரான்

சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா, பாட்ஸ்வானா மற்றும் அண்டை நாடுகளுக்கும் பரவிய இந்த ஒமைக்ரான் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 38 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, நார்வே, பிரிட்டன், கானா, பாட்ஸ்வானா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங், சுவீடன், தென் கொரியா, பிரேசில், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஐஸ்லாந்து, இஸ்ரேல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், ரீயூனியன், சிங்கப்பூர், செக் குடியரசு, பின்லாந்து, கிரீஸ், அயர்லாந்து, மலேசியா, சவுதி அரேபியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே ஆகிய 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமா பரவி வருகிறது.

இதையடுத்து பல்வேறு நாடுகளும் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்…