இலங்கையில் மிகப் பெரிய எரிவாயு நிறுவனத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை மறுப்பதாக பிரதமரின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரி யோஷித்த ராஜபக்ச (Yoshitha Rajapaksa) தெரிவித்துள்ளார்.
லாஃப் கேஸ் நிறுவனத்தை சிரமங்களுக்கு உட்படுத்தி விட்டு, புதிய எரிவாயு நிறுவனம் ஒன்றை யோஷித்த ராஜபக்ச ஆரம்பிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள யோஷித்த ராஜபக்ச, ஒரு எரிவாயு நிறுவனத்தை நஷ்டப்படுத்தவோ அல்லது புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கவோ தனக்கு எவ்வித அத்தியவசியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போதைய சமையல் எரிவாயு நிறுவனங்களுடன் மேலும் எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.