நெருங்கிய உறவினர்கள் எனினும், சிறு பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் எவ்வளவு அக்கறையாக இருக்க வேண்டுமென்பதை புலப்படுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை நாசம் செய்ய முயன்ற காமுகன் அப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்.
பண்டாரவளை வெவதென்ன பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
41 வயதான ரில்வின் திருமணம் முடித்து, 2 பிள்ளைகளிற்கு அப்பாவாக உள்ளார். இவர் பண்டாரவளை பிரதேச சபையின் மின்சார பிரிவில் கடமையாற்றி வருகிறார். அத்துடன், சொந்தமாக வாகனமொன்றை வைத்துள்ளார். அதை பாடசாலை சேவைக்கு பயன்படுத்துகிறார்.
அவரது பாத்திரம் அவ்வளவு நன்றாக இல்லையென்ற அபிப்பிராயம் உள்ளூரில் உள்ளது. மனைவிக்கு மேலதிகமாக அடிக்கடி விபச்சார அழகிகளுடன் பொழுதை கழிக்கிறார் என உள்ளூரில் அபிப்பிராயமுள்ளது. இதனாலேயே அவரை வீட்டுப்பக்கம் அழைக்க பலர் விரும்புவதில்லை.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், ரில்வின் தனது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு அவரது சகோதரி முறையான 4,9 வயதான சகோதரிகள் இருந்தனர். சிறுமிகள் என்ற போதும், அவர்களை பார்த்த போது, ரில்வினின் மனதில் காமம் கிளர்ந்தது. மனதிற்குள்ளிருந்த மிருகம் விழித்துக் கொண்டது.
இரையை தேடும் வல்லூறை போல, அந்த வீட்டிற்கு அதன்பின்னர் அடிக்கடி செல்லத் தொடங்கினார்.
அந்த வீட்டுக்காரர்களுக்கும் ரில்வினை பற்றி நிறைய அறிந்திருந்தனர். எனினும், ஒன்றுவிட்ட சகோதரிகள் முறையானவர்களிடமும் அவர் மிருகம் போல நடந்து கொள்வார் என அவர்கள் கற்பனையும் செய்திருக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து வீட்டிற்கு வருவதற்கு அவர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் கிளம்பவில்லை.
ஒரு நாள் சிறுமிகளின் பெற்றோர் பணி காரணமாக வெளியூருக்கு போக வேண்டியிருந்தது.
வீட்டிற்கு அடிக்கடி வரும் ரில்வினிடம் உதவி கேட்டனர். தாம் வீட்டிற்கு வர தாமதமாகுமென்பதால், பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முடியுமா என கேட்டனர்.
இப்படியொரு வாய்ப்பையே ரில்வின் எதிர்பார்த்திருந்தார். இரண்டு சிறுமிகளையும் கவனித்துக் கொள்வதாக கூறினார்.
இதேபோல ஒரு வாய்ப்பு இனியும் கிடைக்குமா தெரியாது, கிடைத்த ஒரே வாய்ப்பில் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென ரில்வின் திட்டமிட்டார்.
பெற்றோர் இருவரும் வீட்டைவிட்டு சென்ற பின்னர், பாதுகாவலராக அந்த வீட்டிற்கு சென்ற ரில்வனின் மனதிற்குள்ளிருந்த மிருகம் விழித்துக் கொண்டது.
தனது கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச வீடியோக்களை அவர்களிற்கு காண்பித்தார். அந்த வீடியோ பற்றி சிறுமிகளிற்கு எதுவும் புரியாத வயது. அந்த வீடியோவை ஒன்பது வயது சிறுமி ஆர்வத்துடன் பார்த்தாள். ஆனால் பெரியவர்கள் நிர்வாணமாக என்ன செய்கிறார்கள் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீடியோவில் உள்ளதை போல அந்த மனித மிருகம் சிறுமிகளுடன் செயற்பட முனைந்தான்.
அந்த சம்பவத்தின் பின்னர், அந்த மிருகம் இரண்டு சிறுமிகளையும் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது. இரண்டு சிறுமிகளும் அவரது பாலியல் துன்புறுத்தலைத் தாங்கியுள்ளனர். அச்சம் காரணமாக பெற்றோரிடம் அதனை கூறவுமில்லை.
அந்த சிறுமிகள் இப்பொழுது வளர்ந்து விட்டனர். ஓரளவு விபரம் புரிய, பல வருடங்களுக்கு முன்னரே, அந்த மனித மிருகத்திடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு விட்டனர். மூத்த பெண்ணுக்கு இப்போது 19 வயது, மற்ற பெண்ணுக்கு 14 வயது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் ஒரு நாள், அந்த மனித மிருகத்திற்கு இரண்டு பெண்களின் நினைவும் வந்தது.
“இப்போது இரண்டு பெண்களும் மிகவும் அழகாக, வளர்ந்து விட்டனர். இதுதான் சிறந்த பருவம். இருவரையும் மீண்டும் ஒருமுறை மிரட்டி காரியம் பார்க்கலாம் என திட்டமிட்டார்.
ஒரு நாள் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், மனித மிருகம் அந்த வீட்டிற்குச் சென்றது.
சிறு வயதில் அவர்களை துஷ்பிரயோகம் செய்த வீடியோவை வைத்திருப்பதாகவும், தனது விருப்பத்திற்கு கீழ்ப்படியா விட்டால் அந்த வீடியோக்களை பகிரங்கப்படுத்தி விடுவேன் என்றும் மிரட்டினார்.
ரில்வினின் பேச்சால் யுவதிகள் இருவரும் கடுமையாக கோபமடைந்தனர்.
உடனடியாக வீட்டை விட்டு வெளியேறாவிட்டால், சத்தமிட்டு அயலவர்களை அழைக்கப் போவதாக யுவதிகள் கூறியதையடுத்து ரில்வன் வெளியேறினார். தான் யாரென காட்டுவேன் என கூறிவிட்டே சென்றார்.
நடந்த விடயங்களை பற்றி ஆலோசித்த சகோதரிகள், இதனை இப்படியே விட்டால் தமக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, பெற்றோர் வீடு திரும்பியதும் அதனை கூறினார்கள்.
உடனடியாக, பண்டாரவளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
துரிதமாக செயற்பட்ட பொலிசார் அந்த காமுகனை கைது செய்தனர். தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் ஆரம்பத்தில் பொலிசாரை திசை திருப்ப முயன்றாலும், பொலிசாரின் விசாரணையில் அனைத்து உண்மைகளும் கக்கப்பட்டது.
10 வருடங்களாக சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.







