பிரியங்காவை வறுத்தெடுத்த கமல்

கொரோனா காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் மீண்டும் வந்துள்ளார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தின் அன்பாக அனைவருக்கும் நன்றி சொல்லி, அண்ணாச்சியிடம் ஜாலியாக பேசி, அட்வைசை வழங்கி பேச துவங்கினார்.

பிஷேக், பிரியங்காவை இன்ஃபுலியன்ஸ் செய்வதாக அமீர் முகத்திற்கு நேராகவே குற்றசாட்டினார். ஆனால் அதை மறுத்து நீண்ட விளக்கம் கொடுத்தார் பிரியங்கா.

பிறகு நிரூப் மீது எப்படி பாசம் வைத்துள்ளேனோ, அப்படி தான் அபிஷேக் மீதும் வைத்துள்ளேன்.

அதற்காக அவன் என்னை இன்ஃபுலியன்ஸ் செய்யவில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்றார் பிரியங்கா.

தொடர்ந்து கமல் கேட்டதற்கு பவ்யமாக எழுந்து நின்று, பிரியங்கா மீது யார் அதிக அன்பு காட்டுறோம் என்பதில் எனக்கும் நிரூப்பிற்கும் இடையேயான போட்டி நன்றாக உள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட கமல், இது அன்பை காட்டுவதற்கான போட்டியில்லை. நீங்கள் அன்னை காட்ட வேண்டுமானால் போட்டி முடிந்து வெளியே சென்ற பிறகு கூட தொடருங்கள். ஆனால் இங்கு உங்கள் கேமை நீங்கள் விளையாடுங்கள் என்றார்.

அபிஷேக், பிரியங்காவை கூட இருந்தே குழி பறிப்பதாக மறைமுகமாக சொன்னார் அமீர்.

இதைக் கேட்ட பிரியங்கா, அப்படியானாலும் யாரும் யாருடனும் ஃபிரண்டாக இல்லாமல் ரோபோ மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களாக என கமலிடமே கேட்கிறார் பிரியங்கா. அதற்கு பதிலளித்த கமல், நிரூப் வலுவிழந்து விட்டதாக நினைக்கிறீர்கள் இல்லையா.

அது உங்களுக்கு நடக்காது என எதை வைத்து நம்புகிறீர்கள் என கேட்கிறார். அப்படியும் விடாமல், நான் ஸ்டிராங் பிளேயர். என்னை யாராலும் இன்ஃபுலியன்ஸ் பண்ண முடியாது.

நாளைக்கு அபிஷேக்கிற்கும் எனக்கும் போட்டி என்றால் அவனை அடித்து காலி பண்ணி வெளியே அனுப்புவேன் சார் என்றார் பிரியங்கா. அதை கூலாக கேட்டுக் கொண்டிருந்த கமல், நான் ஸ்டிராங்கான பிளேயர்.

நான் நல்ல நடிகர் என நான் சொல்லிக் கொள்ள கூடாது. மக்கள் சொல்ல வேண்டும்.

நானே சொல்லிக் கொண்டிருந்தால் நடக்காது. நான் மட்டும் சொல்லிக் கொண்டிருந்து, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ஒரு பலனும் இல்லை.

அதனால் நீங்கள் நல்ல பிளேயர் என்பதை மக்கள் சொல்லட்டும் என கூறியதும் பார்வையாளர் பெரிய கைதட்டலை எழுப்பினர்.

நான் என்ன செய்ய வேண்டும் என தாழ்ந்த குரலில் கேட்ட பிரியங்காவை கண்டு கொள்ளாமல் அமீரிடம், நீங்கள் உங்கள் கேமில் கவனம் செலுத்தி விளையாடுங்கள்.

சமரசம் செய்வது. தூது போவது உங்கள் வேலையில்லை. தாமதமாக வந்த உங்களுக்கு கடைசி வரை செல்ல வாய்ப்பு என்றால் அதற்காக நீங்கள் முயற்சி செய்யுங்கள். அப்போது தான் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

நட்பு காரணமாக அவர்களை சமரசம் செய்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் என்றார் கண்டிப்பாக.

நான் வைக்கும் விமர்சனங்கள் எல்லாமே உங்களுக்கான துருப்புச்சீட்டு. வெளியில் இருந்து வரும் கருத்துக்களை நான் துருப்புச்சீட்டாக கொடுக்கிறேன் என மீண்டும் சொல்கிறார் கமல்.

நிரூப்பும் இனி எனக்கான கேமை நான் விளையாட போகிறேன். யாருக்காகவும் நிற்க போவதில்லை என கமலிடம் வாக்குறுதி அளிக்கிறார்.