மயங்க் அகர்வால் 62 ரன்களும், புஜரா 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுக்க, இந்தியாவின் முன்னிலை 439 ரன்களை தாண்டியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி நியூஸிலாந்தை விட 405 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மூன்றாம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகவர்வால் 150 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
பின்னர் நேற்று முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.
இன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்திருந்தது. மயங்க் அகர்வால் 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 47 ரன்கள் அடித்தார்.
உணவு இடைவேளையின்போது கில் 17 ரன்களுடனும், கோலி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் முலம் இந்திய அணி 405 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது.
உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா டிக்ளேர் செய்யாமல் தொடர்ந்து விளையாடியது. 53 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.