மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய எட்ஜ் எஸ்30 விவரங்கள் அன்டுடு பென்ச்மார்கிங் வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8.8 எம்.எம். அளவில் உருவாகி இருப்பதாகவும், இதன் மொத்த எடை 202 கிராம் என்றும் கூறப்படுகிறது.