கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Proletarian Champika Ranawaka) கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக தருமாறும், பொருத்தமானவர்களிற்கு தகவலை வழங்கி தீர்வு பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளிற்கு அமைவாக கிளிநொச்சி சிவபுரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் பிரச்சிகைளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மக்கள் வெள்ள அனர்த்தம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர்.