யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நட்டங்கண்டல் பகுதியில் வைத்து மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் குறித்த பகுதியில் நடமாடுகின்றார் என்று முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
அதனையடுத்து மல்லாவி பொலிஸ் உத்தியோகத்தர்களான சபேசன் , நிர்மலன் , பகீரதன் , புஸ்பகுமார ஆகியோர் இணைந்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
பளை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு யாழ். மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று நீதிமன்ற பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.