நெட்ப்ளிக்ஸில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பு வந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடரின் ஐந்தாவது சீசனில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடர் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் ரசிகர்களாகவும் விருப்பத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ‘மணி ஹெய்ஸ்ட்’ குழுவினர் இந்தியர்களுக்கு நன்றி கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் இந்தியர்களால் மிக அதிகமாக பார்க்கப்பட்டதை அடுத்து அந்த குழுவில் உள்ள ப்ரொபசர் உள்பட அனைவரும் இந்தியர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.மேலும் இதில் ஒரு சிலர் தாங்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்தவுடன் இந்தியாவுக்கு வருவோம் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது