இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்துள்ளது.
நியூஸிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்களை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50-க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 426 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அஸ்வின் நடப்பு ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 50 ஒரு விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாகின் ஷா 44 விக்கெட் எடுத்துள்ளார். 3வது இடத்தில் பாகிஸ்தான் அணி ஹசன் அலி 39 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளார்.