நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடித்து கடந்தாண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன்.
இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்.
இப்படத்தில் நயன்தாரா, அம்மனாக நடித்ததினால் இதற்காக பல பாராட்டுகளை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற்றார்.
ஆனால் இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை நயன்தாரா கிடையாதாம்.
ஆம், இப்படத்தில் முதன் முதலில் அம்மன் வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி முடிவு செய்து வைத்திருந்தது நடிகை ஸ்ருதி ஹாசன் தானாம்.
அப்போது ஸ்ருதி ஹாசனின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவெடுத்ததாக, ஆர்.ஜே. பாலாஜி பேட்டியில் கூறியுள்ளார்.