தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒல்லியாக, கலராக இருக்க வேண்டும் என்பது கிடையாது. மக்கள் எப்போதுமே ஒரு நடிகரின் நடிப்பை மட்டும் தான் மதிப்பிடுவார்கள்.
அப்படி நடிப்பின் மூலமே சாதித்த கலைஞர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் சில நடிகைகள் உடல்எடை குறைத்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கில் அதிகம் உடல்எடை குறைக்க முயற்சி செய்வார்கள்.
அந்த வகையில் நடிகை இனியாவும் இடையில் உடல் எடையை குறைத்திருந்தார். எடை குறைத்த நேரத்தில் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தியிருந்தார்.
ஆனால் திடீரென இனியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். காரணம் குண்டான அவரது தோற்றம் தான்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர் குண்டாக இருப்பதை கண்ட ரசிகர்கள் நம்ம இனியாவா என்ன திடீரென குண்டாகிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram