இந்தியாவில் அதிகரித்த கொரோனோ

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அலை அலையாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது. என்னதான் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா குறைந்த பாடு இல்லை.

கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸும் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் மற்றம் உருமாறிய வைரஸ் விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாம்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்து இருக்கிறது. ஒரே நாளில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனி-டையே, கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயி-ரத்து 796 பேர் உயிரிழந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.