தமிழ் திரையுலகில் கொரோனாவால் ஏகப்பட்ட பிரபலங்கள் உயிரிழந்தார்கள்.
பலரின் மரணம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்தடுத்து பிரபலங்களின் மரண செய்தி வர தமிழ் சினிமா அப்படியே ஆடிப்போனது.
அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்களில் இளம் இயக்குனரும், நடிகருமான அருண்ராஜா காமராஜும் பாதிக்கப்பட்டார். அவரது ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்ட அவரது காதல் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரின் இறுதிச்சடங்கின் போது அருண்ராஜாவிற்கு ஆறுதல் கூற நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயறிதி ஸ்டாலின் வந்திருந்தார்கள்.
இந்த நிலையில் இறந்த தனது மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு திருமண வாழ்த்துக்கள் கூறியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.
திருமணநாள் வாழ்த்துகள் பாப்பி 😭❤️ pic.twitter.com/kUidCN8clo
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) December 6, 2021