சுவிஸில் அங்கீகரிக்கப்பட்ட தற்கொலை இயந்திரம்!

சுவிஸில் கருணைக்கொலைக்காகப் பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை பாட்” (Sarco suicide pod ) தனது சட்டப்பூர்வ மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

அடுத்த ஆண்டு (2022) முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று அதன் உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாட்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1,300 பேர் இந்த நடைமுறையை நாடியுள்ளனர். சோடியம் பென்டோபார்பிட்டலின் திரவத்தை உட்கொள்ளுவதன் மூலம் பயனர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இது நோயாளிகளை அவர்கள் இறப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்குத் தள்ளியது. “சர்க்கோ தற்கொலை பாட்” நைட்ரஜனால் நிரப்பப்படுவதன் மூலம் அதன் இலக்கை அடைகிறது.

இதனால் ஆக்ஸிஜனின் செறிவை விரைவாகக் குறைத்து, ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் உள்ளே இருக்கும் நபரைக் கொல்லும் இது எந்த மருந்தும் இல்லாமல் ஒரு விரைவான மற்றும் அமைதியான மரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாளர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியை உணரலாம் இந்த முறையின் மூலம் 30 வினாடிகளில் மரணம் ஏற்படும் என்றும், எந்த பீதியும் இல்லை, மூச்சுத் திணறலும் இல்லை என, இதனை உருவாக்கியுள்ள நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இயந்திரம் உள்ளே இருந்தும் செயல்படுத்தப்படுகிறது, உள்ளே உள்ள நபர் உதவி தேவையில்லாமல் தனக்கு விருப்பமான நேரத்தில் ஒரு பொத்தானை அழுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் சட்டப்பூர்வ மறுஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. 3D பரிமானத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருணைக்கொலை கூடாரம் 2022 இல் சுவிஸில் செயல்பட தயாராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.