காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் அதிகளவு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மகாவலி நதியின் இரு பக்கங்களிலும் ஏனைய நதி கறைகள் மற்றும் சாலைகளில் இந்த மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காதலுக்கு ஒரு மரம் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக, காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அரச செலவில் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஏனைய நிதி நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் இதற்கான அனுசரணையை பெற்றுக்கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.