நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்தடை – வெளியான தகவல்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழமைக்குத் திரும்பும் வரை நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.