நம்ம ஹன்சிகாவா இது.?

தமிழில் சூர்யா, விஜய், விஷால், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. தற்போது அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இருக்கின்றார்.

நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘வாலு’ திரைபடத்தில் ஹன்சிகா நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய காலகட்டத்தின் ஹாட் டாபிக்காக இவரது காதல் சம்பவம் தான் இருந்தது. பின்னர், ஹன்சிகாவுக்கு சிம்புவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், எனவே, இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் இந்த பிரேக்கப்புக்கு பின்தான் ஹன்சிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து அவர் ஹிட் படங்களில் நடிக்க துவங்கினார். ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து இவர் நடித்தது மிகப் பெரிய ஹிட்டாக அமைந்தது.

ஹன்சிகாவின் பிளஸ் அவரது உடல் ஜப்பியாக இருந்தது தான். அது ஹன்சிகாவுக்கு நிறைய ரசிகர்களை பெற்றுத் தந்தது. ஆனால் திடீரென்று யாரோட அறிவுரையை கேட்டார் என்று தெரியவில்லை. தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.

இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. தற்போது அவர் மிக ஒல்லியாகி ஜீரோ சைஸில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ஹன்சிகா தானா என்று நம்ப முடியாமல் ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)