உணவிற்கு பின் ஏற்படும் உப்பதைகளை தவிர்ப்பது எப்படி?

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் ஜங்க் புட்களை விரும்பி சாப்பிட தொடங்கிவிட்டனர். தரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் பல உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

மேலும், சிலருக்கு வயிறு வீக்கம் ஏற்படும் இதனால், பலரின் கேளியும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். உணவுக்கு பின் ஏற்படும் வீக்கத்தால், உங்கள் வயிற்றில் அதிகப்படியான வாயு உற்பத்தியாக வழிவகுக்கிறது. ஆனால், இதனையெல்லாம் தடுக்க சில இயற்கை பொருட்களை வைத்த சரிசெய்ய முடியும்.

கவனம் 1

பலரும் சாப்பிடும் போதே அடிக்கடி தண்ணீர் அருந்துவார்கள். இதனால் திரவங்கள் வயிற்று அமிலத்தை நீர்த்துப்போக செய்துவிடுகிறது. இதனாலே செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே சாப்பிட்ட பின் தண்ணீர் அருந்தாமல் குறைந்தபட்சம் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது.

கவனம் 2

எப்போதுமே உணவை சாப்பிடும் போது மெதுவாக சாப்பிட வேண்டும். அவசர அவசரமாக உணவு அருந்துவதால், உணவை மென்று விழுங்க முடியாமல் வீக்கம் ஏற்படும். எனவே உணவை சாப்பிடும் போது மெதுவாக மென்று சாப்பிடுவது நல்லது.

கவனம் 3

காலை உணவுக்கு பின் உடற்பயிற்சி செய்வது வாயு ஏற்படுவதை தடுக்கும். இவை உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவும். உணவுக்கு பின் நடைப்பயிற்சியை மேற்கொள்வது வயிறு வீக்கத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கவனம் 4

உணவில் அதிகமாக உப்பை எடுத்துக்கொள்வது வயிறு வீக்கத்தை அதிகப்படுத்தும்., அவை உடலில் ஏற்படும் தண்ணீரை வெளியேற்றும் செயல்முறையை தடுக்க செய்கிறது. எனவே குறைந்த அளவு உப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மிளகு மற்றும் வினிகர் சேர்த்துகொள்வது சிறந்தது.

கவனம் 5

இதில் முக்கியமாக கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். இவை உடலில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிகரிக்க செய்கிறது. எனவே, அதிகளவு குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக இஞ்சி டீ புதினா டீ, கிரீன் டீ போன்றவற்றைகளை சாப்பிடலாம்.

கவனம் 6

தானியங்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடக்கூடாது. இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் வீக்கத்திற்கு பொதுவான காரணமாகும். எனவே ஃபைபர் உட்கொள்ளலில் கவனம் செலுத்த வேண்டும்.

கவனம் 7

உங்கள் உணவில் அடிக்கடி கீரை உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்,. ப்ராக்கோலி, முட்டைகோசு போன்ற காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவதால் வீக்கம் குறையும்.

மேலும், பப்பாளி, அன்னாசிப்பழம் போன்ற பழ வகைகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். ஏனெனில் பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.