தமிழகத்தில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றுதான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, 5வது சீசன் பரபரப்பாக ஓடிகொண்டு இருக்கின்றது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அரசியல் கட்சி டாஸ்க் இடம்பெற்று கொண்டு வருகின்றது.
இதில் தாமரை ராஜுவின் கட்சியில் மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வருகின்றனர். இதேவேளை சக போட்டியாளர்களான பிரியங்கா பாவனி ஆகியோர் மற்றொரு கட்சியில் இருக்கிறார்கள்.
66 வது நாளான இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் தாமரையை விமர்சிக்கும் வகையில் பிரியங்கா கோஷம் எழுப்பி இருக்கிறார். “தெரியல தெரியலனு சொல்றீங்க.. நாடகம் நல்லா போடுறீங்க” என பிரியங்கா கூறிய நிலையில் தாமரை அதிகம் எமோஷ்னல் ஆகி இருக்கிறார்.
இதேவேளை வெற்றி கொடிக்கட்டு டாஸ்க் இரண்டில் தனது கட்சியின் கொடிகளை யார் அதிகமாக கொடி கம்பத்தில் வைத்திருக்கிறார்களே அவர்களா இந்த போட்டியில் முன்னணிலையில் இருப்பார்கள்.
இந்த போட்டியில் போது தாமரை மட்டும் அபிநய் இடையே சண்டை கடுமையான ஏற்பட்டுள்ளது. அபிநய் தாமரையிடம் வேகமாக சண்டைக்கு போக அமீர் அவரை தடுத்து இழுத்து சென்றுள்ளனர்.
அபிநய் மீண்டும் சண்டை போட வரும்போது சக போட்டியாளர்களான அமீர், நிரூப், சஞ்சீவ் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் சஞ்சீவ் அபிநயிடம் நடந்ததை எடுத்து கூறிக்கொண்டு இருந்த போது தாமரை மீண்டும் வர அவர் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.