குழந்தைகளின் உயிரை வாங்கிய ரயில்… காப்பாற்ற சென்ற உறவினருக்கு நேர்ந்த சோகம்..!

வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிபல்பாரி மாவட்டத்தில் உள்ள மூன்று குழந்தைகள் தங்களின் வீட்டின் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதனை கண்ட அந்த குழந்தைகளின் உறவினர்காரர் அவர்களை காப்பாற்ற ஓடிசென்றார். அப்போது ரயில் மோதி தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.